நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >ஹார்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை: மேக்ரான் - மெலோனி 'நெருக்கமான' கட்டிப்பிடிப்பு: வைரல் வீடியோ

ஹார்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை: மேக்ரான் - மெலோனி 'நெருக்கமான' கட்டிப்பிடிப்பு: வைரல் வீடியோ

ஞாயிறு, ஏப்ரல் ௧௯, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
ஹார்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை: மேக்ரான் - மெலோனி 'நெருக்கமான' கட்டிப்பிடிப்பு: வைரல் வீடியோ

பாரிஸில் உள்ள எலிசி (Élysée) அரண்மனையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது இத்தாலிய சகா ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு அசாதாரணமான தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த உயர்மட்ட ராஜதந்திரக் கூட்டத்திற்கு மத்தியில், இந்த சங்கடமான வரவேற்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: கேமராக்கள் பதிவாகிக் கொண்டிருந்தபோது, மேக்ரான் மெலோனியை நீண்ட நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தமிட்டு வரவேற்றார். இது மெலோனியைச் சற்று சங்கடத்திற்குள்ளாக்கியது போலத் தெரிந்தது. இருவரும் விரைவாகத் தங்களைச் சமாளித்துக்கொண்ட போதிலும், இந்தத் தருணம் ராஜதந்திர மரபுகள் மற்றும் தனிப்பட்ட எல்லைகள் குறித்த விவாதங்களை இணையத்தில் கிளப்பியுள்ளது. வீடியோவைப் பாருங்கள்: French President Emmanuel Macron and Italian Prime Minister Giorgia Meloni shared a rather awkward and unusual hug right in front of the cameras. The video quickly went viral online. pic.twitter.com/NQHnhRmDEt — NEXTA (@nexta_tv) April 17, 2026 ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இணைந்து நடத்திய உச்சிமாநாட்டில் பங்கேற்க மெலோனி பாரிஸ் சென்றிருந்தார். சமூக ஊடக எதிர்வினைகள்: இந்தக் காட்சியை ‘நெக்ஸ்டா’ (NEXTA) என்ற எக்ஸ் தளம் பகிர்ந்து, "பிரான்ஸ் அதிபரும் இத்தாலி பிரதமரும் கேமராக்களுக்கு முன்னால் ஒரு விசித்திரமான மற்றும் சங்கடமான கட்டிப்பிடிப்பைப் பகிர்ந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன், பல்வேறு கருத்துகளையும் ஈர்த்துள்ளது. ஒரு பயனர், "அவர் பெண் அரசியல்வாதிகளிடம் விசித்திரமாக நடந்துகொள்கிறார்" என்று விமர்சித்திருந்தார். மற்றொருவர், "ஜி7 மாநாட்டு அறிக்கைக்குப் பிறகு இருவருக்கும் இடையே நிலவும் மோதல் போக்கை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது" என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், சிலர் மேக்ரானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "இதில் சங்கடம் எதுவும் இல்லை, அவர் ஏதோ நகைச்சுவையாகச் சொன்னதற்கு அவர் (மெலோனி) எதிர்வினையாற்றுகிறார், அவ்வளவுதான்" என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். முக்கியப் பேச்சுவார்த்தை: இந்தச் சமூக ஊடக விவாதங்களுக்கு மத்தியில், தலைவர்கள் தங்கள் முக்கிய இலக்கான கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தினர். ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்ற பிரான்ஸ் மற்றும் பிரிட்டன், அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பன்னாட்டு முயற்சியைத் தொடங்கவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. கூட்டத்திற்குப் பிறகு பேசிய மேக்ரான், "ஹார்முஸ் நீரிணையை அனைத்துத் தரப்பினரும் நிபந்தனையின்றி உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார். ஸ்டார்மர் பேசுகையில், கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாக்க சர்வதேசக் குழுவை வழிநடத்த பிரான்சும் பிரிட்டனும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். (பொறுப்பு துறப்பு: இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் வைரலான காட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.)

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

TVK Vijay: எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்
top

TVK Vijay: எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று மேற்க்கொண்ட தேர்தல் பரப்புரையில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தது கவனம் பெற்றது. விஜய் தேர்தல் பரப்புரை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21- ஆம் தேதி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) ரோடு ஷோ சென்றவாறு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்குச் சேகரித்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் கூடி விஜய்க்கு பரிசுகள் வழங்கியும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்ச் மற்றும் தர்காவில் வழிபாடு: அப்போது வயர்லெஸ் சாலையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் விஜய் முட்டிப்போட்டு நடந்து பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு பின்னர் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினர், பின்னர் தேவாலய பங்குத்தந்தையிடம் ஆசி வாங்கிவிட்டு தனது வாகனப்பரப்புரையை தொடர்ந்தார். இருண்டு கிடக்கும் தமிழக அரசியலில் ஒளியேற்ற வரும் கடைசி நம்பிக்கை நம் வெற்றித் தலைவர் மட்டுமே! (1/3) #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026 pic.twitter.com/uuPFjGkciO — TVK IT Wing Official (@TVKHQITWingOffl) April 19, 2026 சிறிது தூரம் சென்ற பின் விஜய் அங்குள்ள தர்காவிற்கு சென்று ஆசி பெற்றார். பின்னர் கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்க்கொண்டார் தனது கட்சி எவ்வித மதவாதத்திற்கும் எதிரானது என்பதையும், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய "மதச்சார்பற்ற" கட்சி என்பதையும் வெளிப்படுத்த விஜய் விரும்புவதாக தவெகவினர் தெரிவித்து வருகின்றனர் இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!
top

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!

விபத்துக்குள்ளான கட்டனார்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
திமுக கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
top

திமுக கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு தேர்தல் அரசியல் செய்தி: திமுக கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பாஜகவுக்கு செல்லும் வாக்கு என ஸ்டாலின் எச்சரிக்கை, திராவிட மாடல் 2.0 மூலம் மாநில உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை காப்போம் என வலியுறுத்தல். Tamil Nadu election politics: CM Stalin warns that any vote outside the DMK alliance effectively supports BJP, stressing Dravidian Model 2.0, state rights and welfare schemes as key issues in the 2024 Assembly campaign. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்