தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாத முதல் நாள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத முதல் நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும். இந்த நாளை தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். இன்று தமிழ் புத்தாண்டு: இதன்படி, இன்று தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்கள் காலை முதலே உற்சாகமாக காணப்படுகின்றனர். அதிகாலையிலே எழுந்து குளித்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாக தமிழர்கள் கொண்டாடி வருவதால், இந்த நாளில் காலையிலே தங்கள் வீட்டின் முன்பு வாசல் தெளித்து கோலமிட்டு அலங்கரித்துள்ளனர். மேலும், செல்போன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காலை முதலே குவிந்து வருகிறது. தமிழ் புத்தாண்டுடன் சேர்ந்து செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவு கோயில்களில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவாலயங்களிலும், முருகப்பெருமான் கோயில்களிலும், வைணவத் தலங்களிலும், அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவு காலை முதல் காணப்பட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் சாமி தரிசனம்: தற்போது தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரையில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், தமிழ் புத்தாண்டு என்பதால் பல வேட்பாளர்களும் காலையிலே கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தங்களது பரப்புரையைத் தொடங்கி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
Tamil New Year 2026: இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
|17 மணி நேரம் முன்|சுகுமாறன்

தொடர்புடைய செய்திகள்

top
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | New Poster Released for the Movie ‘Spider-Man: Brand New Day’

top
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம்
டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்ட அவர், இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முகநூல் பதிவில், டித்வா அனர்த்தம் “கடந்த நவம்...

top
அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்! - விஜய் புகழஞ்சலி
அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...