தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் வெளிநாடு செல்லவுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைக் குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 23ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 85.10% மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த முறை விஜயின் அரசியல் வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கணித்துள்ளனர். தேர்தலின் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆதவ் அர்ஜூனா இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா வேட்பாளர்களையும் அழைத்து மே 4ம் தேதி செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தலைவர் விஜய் அறிவுறுத்தி வருகிறார். அதனால் எங்களைப் பொறுத்தவரை மே 4ம் தேதி மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை தருவார்கள் என்பதை உறுதியாக நம்புகிறோம். அன்று மக்களுடைய முடிவை நீங்கள் பார்ப்பீர்கள். வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டிய நபர்கள் பற்றிய விபரத்தை தயார் செய்ய சொல்லியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை அன்று செய்ய வேண்டிய பணிகளை தலைவர் தொடங்கி 234 தொகுதி வேட்பாளர்கள் வரை அனைவரும் தயார் செய்து வருகிறார்கள். தேர்தல் நாளில் எங்கள் தவெக வேட்பாளர் சினோரா அசோக் சேகர்பாபு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயமாகும். தவெகவில் இருந்து யாரும் பணம் கொடுத்து ஓட்டை வாங்கவில்லை. வீடு வீடாக மக்களிடம் வாக்கு கேட்டு பெரிய புரட்சியை மேற்கொண்டார்கள். விஜய் தினமும் மீட்டிங்கில் தான் இருக்கிறார்” என தெரிவித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியானது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஆதவ் அர்ஜூனா, “ முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல், துணை முதலமைச்சர் துபாய், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விஜய் தினமும் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஆஸ்திரேலியாவுக்கு இல்லை, நாளைக்கு நிலவுக்கு போகிறார். திமுக தான் அதற்கான ராக்கெட்டை தயார் செய்து கொண்டிருக்கிறது என கிண்டலாக பதிலளித்தார். தயவு செய்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். மக்களுக்கு நிறைய கடமைகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி விஜய் சிந்தித்து கொண்டிருக்கிறார். கடைசி 4 நாட்களில் தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறியுள்ளது. விஜய் முதலமைச்சராக வேண்டும் என 234 தொகுதிகளிலும் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
TVK Vijay: மே 4ம் தேதி விஜய் வெளிநாடு செல்கிறாரா? - ஆதவ் அர்ஜூனா சொன்ன பதில்.. தொண்டர்கள் ஷாக்!


