Volkswagen Taigun Facelift: ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடலில் வழங்கப்பட்டுள்ள, புதிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வாகன் டைகன் வந்தாச்சு ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடலானது, ரூ.11 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்காக புதிய உத்தரவாத பை-பேக் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எக்ஸ்-ஷோரூம் விலையில் 75 சதவிகித மீதி மதிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் 3 ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லுபடியாகும். சலுகையானது வரும் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பாக புதிய டைகன் கார் மாடலுக்கான முன்பதிவை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய டைகனின் விலைப்பட்டியல் மேம்படுத்தப்பட்ட டைகனின் விலை வரம்பானது ரூ.11 லட்சத்தில் தொடங்கி, ரூ.19.3 லட்சம் வரை நீள்கிறது. அதாவது முந்தைய எடிஷனை காட்டிலும் புதிய டைகனின் தொடக்க விலையானது 42 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டாப் எண்ட் வேரியண்டின் விலையானது 11 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ட்ரிம் 1.0TSI 6MT 1.0TSI 8AT 1.5 TSI 7 DCT கம்ஃபோர்ட் லைன் ரூ.11 லட்சம் - ஹைலைன் ரூ.12.7 லட்சம் ரூ.13.8 லட்சம் ஹைலைன் ப்ளஸ் ரூ.14.3 லட்சம் ரூ. 15.45 லட்சம் GT லைன் ரூ.14.6 லட்சம் ரூ.15.75 லட்சம் டாப் லைன் ரூ.16 லட்சம் ரூ.17.18 லட்சம் GT ப்ளஸ் க்ரோம் - - ரூ.19 லட்சம் GT ப்ளஸ் ஸ்போர்ட் - - ரூ.19.3 லட்சம் புதிய டைகனின் போட்டியாளர்கள் ஸ்கோடா குஷக்கின் மெக்கானிக்கல் ட்வின் ஆக இருந்தாலும், தொடக்க விலை அடிப்படையில் ஃபோக்ஸ்வாகனின் தொடக்க விலையானது 31 ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகமாக உள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டரின் ரூ.10.49 லட்சம் என்ற தொடக்க விலையை காட்டிலும் ரூ.51 ஆயிரம் அதிகமாகும். உள்ளூர் சந்தையில் டைகன் மாடலானது கியா செல்டோஸ், டாடா சியாரா, ஹுண்டாய் க்ரேட்டா, ஹோண்டா எலிவேட், மாருதி விக்டோரிஸ் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய கார் மாடல்களுடன் மோத உள்ளது. புதிய டைகனின் இன்ஜின் விவரங்கள் டைகனின் ஃபேஸ்லிஃப்டானது அதே 115hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் மற்றும் 150hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதுவும் மாறாதா 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் தொடர்கிறது. அதேநேரம், 1.0 லிட்டர் TSI இன்ஜின் ஆனது குஷக் ஃபேஸ்லிஃப்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. 1.0 லிட்ட TSI இன்ஜின் ஆட்டோமேடி எடிஷன் ஆனது லிட்டருக்கு 19.54 கிலோ மீட்டரும், மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 19.98 கிலோ மீட்டரும், 1.5 லிட்டர் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் எடிஷன் லிட்டருக்கு 18.85 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் என ஃபோக்ஸ்வாகன் அறிவித்துள்ளது. மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய டைகனில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அப்டேட்டாக, டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள ரியர் டிஸ்க் ப்ரேக் அம்சம் கருதப்படுகிறது. புதிய டைகனில் உள்ள புது அம்சங்கள்.. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டைகனில் புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்டுடன் கூடிய ஒரு மேம்படுத்தப்பட்ட 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், அப்டேடட் ஏசி யூனிட், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் மற்றும் வென்டிலேடட் முன்புற இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. இதுபோக ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய எடிஷனிலிருந்த பெரும்பாலான அம்சங்கள் அப்படியே புதிய எடிஷனிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய டைகனில் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் டைகனின் வெளிப்புறத்தில் லேசான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2026 ஃபோக்ஸ்வாகன் டைன் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது, டெய்ரோன் தாக்கத்தில் முன்புற முகப்பு பக்கம், ஸ்லிம்மர் க்ரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள், ஸ்போர்டியர் பம்பர் மற்றும் ஒளிரூட்டப்பட்ட ஃபோல்க்ஸ்வாகன் லோகோ ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுபோக புதியதாக வடிவமைக்கப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்கள், சீக்வண்சியல் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய திருத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் சற்றே மாற்றப்பட்ட ரியர் பம்பர் ஆகியவையும் புதிய அம்சங்களாக உள்ளன.
Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?



