நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🌍 உலகம்
  3. >Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
🌍 உலகம்

Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!

திங்கள், ஏப்ரல் ௧௩, ௨௦௨௬|1 நாள் முன்|ஸ்ரீராம் ஆராவமுதன்|Abp News
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!

Donald Trump Hormuz Blockade: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்து, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்டுள்ளார். ஹார்முஸை பாதுகாக்க அமெரிக்க ராணுவம் உண்மையிலேயே நிறுத்தப்பட்டால், அது மத்திய கிழக்கில் போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். அமெரிக்கா தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிப்ரவரி 28-ம் தேதி அன்று ஈரான் போரை அறிவித்ததிலிருந்து, அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு இவ்வளவு அருகில் நிறுத்தப்பட்டு, அதன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் தீவிரமாக செயல்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது குழுவுடன் வெறுங்கையுடன் திரும்பியதில் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். ஈரானை குற்றம் சாட்டும் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடமிருந்து ஒரு பேரலுக்கு 2 மில்லியன் டாலர் வரை சட்டவிரோதமாக வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாக ஈரான் மீது ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த சர்வதேச நீர்வழியை கட்டுப்படுத்த ஈரான் முயல்வதாகவும், இந்த நடவடிக்கையை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனைகளுடனும், பாதுகாப்பாகவும் ஈரான் திறக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்க கடற்படை அட்மிரல் பிராட் கூப்பரின் கூற்றுப்படி, ஒரு புதிய, பாதுகாப்பான கடல்வழிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் கப்பல்களின் போக்குவரத்திற்காக திறக்கப்படும். இந்த பாதை, உலகம் முழுவதும் தடையற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும். வளைகுடாவை நம்பி இருக்கும் இந்தியா 2019-ஆம் ஆண்டு முதல் ஈரானிய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேற்கு ஆசியாவில் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போதுதான், 7 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஈரானிய கச்சா எண்ணெய் சரக்கை பெற்றது. இருந்தபோதிலும், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகளின் இறக்குமதியை இந்தியா பெருமளவில் சார்ந்துள்ளது. இந்த நாடுகள் பெரும்பாலும் அந்த வழித்தடத்தின் வழியாகவே பயணிக்கின்றன. சமீபத்திய பதற்றங்களின் போது, ​ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது. இருப்பினும், இது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அணுகல் தடை செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் அறிவிப்பால் சிக்கல் ட்ரம்ப் எச்சரித்துள்ளதுபோல், அமெரிக்க கடற்படை, ஒரு கடற்படை முற்றுகையை அமல்படுத்த முற்பட்டால், "எதிரி அல்லாத" கப்பல்களை அனுமதிக்கும் ஈரானின் தற்போதைய நிலைப்பாடு தொடருமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. எப்படியாயினும், ட்ரம்ப் இந்த முற்றுகையை அறிவித்ததாலேயே, இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் கணிசமான பங்கை கொண்டுள்ள அப்பகுதியில் ஏற்படக்கூடிய விநியோகத் தடைகள் குறித்த கவலைகளை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் ஏற்படும் தாக்கம் என்ன.? இந்தியா தனது எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை பெரும்பாலும் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவின் ராணுவ முற்றுகை, திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவ எரிவாயு (LPG) விநியோகத்தை மீண்டும் சீர்குலைக்கக்கூடும். இது நாட்டில் எரிபொருள் விலைகளை உயர்த்தி, பணவீக்கத்தை கடுமையாக பாதிக்கும்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

125 ஆண்டு வரலாற்றில் முதன்முறை... ஆஸ்திரேலியா ராணுவத்துக்கு புது அடையாளம் கொடுத்த பெண்! யார் இவர்?
உலகம்

125 ஆண்டு வரலாற்றில் முதன்முறை... ஆஸ்திரேலியா ராணுவத்துக்கு புது அடையாளம் கொடுத்த பெண்! யார் இவர்?

சூசனின் இந்த நியமனம் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
அமெரிக்காவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு! #Video
உலகம்

அமெரிக்காவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு! #Video

அமெரிக்க சகோதர சகோதரிகளே என விவேகானந்தர் உரையாற்றியது, உலகளாவிய கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
உலகின் ஏன் 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன? மற்ற நாடுகளால் ஏன் அவற்றை உருவாக்க முடியவில்லை?
உலகம்

உலகின் ஏன் 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன? மற்ற நாடுகளால் ஏன் அவற்றை உருவாக்க முடியவில்லை?

தற்போது உலகில் மொத்தம் 12,121 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 90 சதவீதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமானவை. ஏன் இந்த பாகுபாடு உள்ளது? மற்ற நாடுகளால் ஏன் அணு ஆயுதத்தை உருவாக்க முடியவில்லை? பார்க்கலாம்... இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்