நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >ஆயிரத்தில் ஒருவன்- 2க்கு 'நோ' சொன்ன ஆண்ட்ரியா... செல்வராகவன் குறித்து ஓபன் ஸ்பீச்
🎬 சினிமா

ஆயிரத்தில் ஒருவன்- 2க்கு 'நோ' சொன்ன ஆண்ட்ரியா... செல்வராகவன் குறித்து ஓபன் ஸ்பீச்

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
ஆயிரத்தில் ஒருவன்- 2க்கு 'நோ' சொன்ன ஆண்ட்ரியா... செல்வராகவன் குறித்து ஓபன் ஸ்பீச்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் வெளியாகி, தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான 'கல்ட் கிளாசிக்' படமாகப் போற்றப்படுவது ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தப் படத்தின் 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையில், அப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஆயிரத்தில் ஒருவன் 2-ல் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். அந்தப் படம் உருவாவதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அதில் நான் இருக்க மாட்டேன். இதற்குக் காரணம், இயக்குநர் செல்வராகவனுடன் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று எனத் தெரிவித்தார். மேலும், முதல் பாகத்திற்காக சுமார் 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும், அந்த அனுபவம் தனக்கு பிந்தைய படங்களில் நடிப்பதை கச்சிதமாகவும் எளிதாகவும் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனுஷ் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ உருவாகும் என்று செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இருப்பினும், அதன் பிறகு அந்தப் படம் குறித்த எந்தப் புதிய அறிவிப்பும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. இப்போது ஆண்ட்ரியாவின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடிப்பு மட்டுமன்றி இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா, தற்போது பல முக்கியப் படங்களில் பிஸியாக உள்ளார். வெற்றி மாறனின் 'அரசன்' படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். கோபி நயினாரின் 'மனுசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சென்சார் சிக்கல்களால் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான 'மாஸ்க்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

நலத்திட்டங்கள் தொடரமீண்டும் வேண்டும்: தி.மு.க., * தளபதி எம்.எல்.ஏ., பிரசாரம்
சினிமா

நலத்திட்டங்கள் தொடரமீண்டும் வேண்டும்: தி.மு.க., * தளபதி எம்.எல்.ஏ., பிரசாரம்

மதுரை: மக்களுக்கான நலத் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என மதுரை வடக்கு இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சினிமா

ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளை மாளிகையில் ஒரு நடன மண்டபம் கட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய திட்டம், நீதிமன்ற உத்தரவின் மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நீதிபதி ரிச்சர்ட் லயன், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முறையான சட்ட நடைமுறைகளை வெள்ளை மாளிகை மீறியதே இதற்குக் காரணம். வெள்ளை மாளிகையின் உரிமையாளர் ஜனாதிபதி அல்ல தேசிய தலைநகர திட்... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
'இ 20' பெட்ரோல் பாதுகாப்பான எரிபொருள்: பெட்ரோலிய டீலர்கள் வரவேற்பு
சினிமா

'இ 20' பெட்ரோல் பாதுகாப்பான எரிபொருள்: பெட்ரோலிய டீலர்கள் வரவேற்பு

சென்னை : இ 20 பெட்ரோல் இந்திய தரநிலைகளுக்கு உட்பட்டு, முறையாக சோதிக்கப்பட்ட பாதுகாப்பான எரிபொருள் என, தமிழக இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்