சினிமாசமரசம் ஆனாரா சங்கீதா? செய்தியாளர்களை சந்திக்கும் திட்டத்தை கைவிட்டதாக தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதனிடையே அரசியல் கட்சி தொடங்கியது முதல் பல தடைகளை சந்தித்து வரும் விஜய், சமீபத்தில் அவரது மனைவி ஒரு ஷாக் கொடுத்தார். தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறி, அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவில் அவர் குறிப்பிட்டது நடிகை த்ரிஷா தான் என்ற பலரும் கூறி வந்தனர். இந்த மனு பொதுவெளியில் வெளியான ஓரிரு நாட்களில் விஜய் த்ரிஷா இருவரும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர். இதனால் சமூகவலைதளங்களில் இந்த விஷயம் பரபரப்பான பேசப்பட்ட நிலையில், இந்த விவாகரத்து மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெற உள்ளது. விவாகரத்துக்கு விஜய் சம்மதிப்பாரா? மீண்டும் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜீவனாம்சம் தொடர்பான இந்த வழக்கு இழுபறி நீடிக்குமா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. இதனிடையே இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் ஏப்ரல் 20-நட் தேதி சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் அவர் தனது தரப்பு நியாயம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் சங்கீதா தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இளம் கொடுத்த போட்டோ ஃபிரேமில், மறைந்த நடிகரும், தே.மு.தி.க நிறுவனருமான விஜயகாந்த், ஒரு கையில் விஜய்யின் கையையும், மற்றொரு கையில் விஜய்யின் மனைவி சங்கீதா (திருமண கோலத்தில்) கையையும் பிடித்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தை வாங்கிய விஜய், சில நொடிகள் அந்தப் படத்தையே உற்று நோக்கி ஒருவித மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் அதைத் தனது உதவியாளர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான சங்கீதாவின் பழைய வீடியோ ஒன்றில், திருமண நிச்சயதார்த்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் பரிசாக அளித்து சர்ப்ரைஸ் கொடுத்ததாகவும், திருமணத்திற்கு முன்பும், பின்பும் தனக்கு பல பரிசு பொருட்களை வழங்கி ஆச்சரியப்படுத்தியதாக கூறியுள்ள சங்கீதா, இதற்கு தானும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பரிசுகள் கொடுத்ததாகவும், கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.