தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். என்னதான் காலம் மாறினாலும் புதிய நடிகைகள் வந்தாலும் திரிஷாவிற்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 40 வயதை கடந்தும் இவ்வளவு கவர்ச்சியும், மார்க்கெட்டும், ரசிகர் ஆதரவும் வைத்திருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். ஃப்ரீ விசானு சொல்லுவாங்க; ஏமாந்துறாதீங்க... வியட்நாம் டூர் போற இந்தியர்களுக்கு முக்கியமான வார்னிங்! ஆனால், சமீப காலங்களில் திரிஷாவின் திரைப்படங்களை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கை தான் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் எதை செய்தாலும் அது உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு தனது வளர்ப்பு நாயுடன் திஷா சென்ற புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து, விஜய்யுடன் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவியது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் ஒரு புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது, நடிகை திரிஷா சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல்கள் பரவி வந்தன. நடிகை திரிஷா, சிரஞ்சீவி நடிப்பில் `விஸ்வம்பரா' மற்றும் மோகன்லால் நடிப்பில் `ராம்' ஆகிய படங்களில் நடிகக் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படங்களுக்கு பிறகு திரிஷா எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை திரிஷா தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டேன், நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன் அவர்களுக்கு நேற்றோடு இரண்டு வயது. இதில் இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா, இல்லை இன்றைய கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா?" என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


