நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் - அன்பில் மகேஷ்
🏛️ அரசியல்

200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் - அன்பில் மகேஷ்

வியாழன், ஏப்ரல் ௨௩, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|kalaiyarasi sundharam|The Indian Express
200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் - அன்பில் மகேஷ்

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி வரகனேரி த.செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப்பள்ளியில் தனது மனைவி ஜனனியுடன் வந்து ஜனநாயக கடமை ஆற்றினார். மக்களோடு மக்களாக வரிசையில் 30 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள்; எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களின் தீர்ப்பு, அவர்களின் வீட்டுப் பிள்ளையான இந்த மகேஷுக்கே சாதகமாக அமையும். “நான் திருவெறும்பூர் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டபோது என்னை தி.மு.கவினர் அழைத்துச் சென்று வாக்குகள் சேகரிக்க வைத்தனர். அதற்கடுத்த தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, கடந்த முறை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று என்னை வழிமறித்து உரிமையுடன் கேட்டனர். ஆனால் தற்போது 3-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை பொதுமக்கள் வரவேற்று, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு சில தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி கொடுங்கள் என்று உரிமையுடன் மனுக்களை கொடுக்கின்றனர். நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறேன். தி.மு.க அரசின் சாதனைகள் மற்றும் நான் தொகுதிக்கு செய்திருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். தமிழக முதல்வரின் ஓய்வறியா உழைப்பிற்குத் தமிழகப் பெண்களும், தாய்மார்களும் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். பெண்களின் ஆதரவு எந்த இயக்கத்திற்கு இருக்கிறதோ, அந்த இயக்கத்தின் வெற்றி உறுதி. தமிழக முதல்வர் கூறியது போல, வரவிருக்கும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்பது நிச்சயம். ஸ்டாலின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார் என உறுதிபடத் தெரிவித்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு, "திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மக்களுடன் நெருங்கி பழகக் கூடியவர். அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்க கூடியவர். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். செய்தி: க.சண்முகவடிவேல்

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்
அரசியல்

மேற்கு வங்கத்தில் வன்முறை: இரு தரப்பினர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் முர்ஷிதாபாத்தில் பதற்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
மொத்தமாக அரண்டு போன நேட்டோ நாடுகள்.. நட்பு நாடுகளையே காலி செய்யும்.. டிரம்ப்பின் பயங்கர பிளான்
அரசியல்

மொத்தமாக அரண்டு போன நேட்டோ நாடுகள்.. நட்பு நாடுகளையே காலி செய்யும்.. டிரம்ப்பின் பயங்கர பிளான்

Trump's ‘Naughty and Nice' List: NATO Allies Put on Notice Over Iran War Support இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்யக் கோரி 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
அரசியல்

இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்யக் கோரி 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, நான்கு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சியில் குளத்துள்வாய்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகாமில் இருப்பவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு கிராம மக்களுக்கும் முகாம் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்வதில் சிக்கல் நீடிப்பதாகவும், முகாம் அருகே போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அங்குப் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், முகாம் மக்கள் முன்பு தங்கியிருந்த பழைய ஷெட்களைத் தங்களது விவசாய விளைபொருட்களை உலர்த்தும் களமாகப் பயன்படுத்த வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 17-ம் தேதி விவசாயப் பாதையைச் சமன் செய்யும் பணியின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகப் பதற்றம் அதிகரித்தது. "முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே வாக்களிப்போம்" என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இன்று காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கிய நிலையில், குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய 4 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வாக்குச்சாவடியில் மொத்தம் 983 வாக்காளர்கள் இருந்தும், காலை 11 மணி நிலவரப்படி வெறும் 8 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். மக்கள் எவரும் வராததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. "வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியமே இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாகக் காரணம். முகாமை மாற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்," என கிராம மக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். நாங்குநேரியிலும் தேர்தல் புறக்கணிப்பு: இதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்திலும் தேர்தல் புறக்கணிப்பு அரங்கேறியது. அங்குள்ள 290-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 969 வாக்காளர்கள் ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை. கடந்த மார்ச் 2-ம் தேதி நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறி அக்கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குச்சாவடியும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - க.சண்முகவடிவேல் இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்