தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 6 மணிமுதல் தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிகாலை முதல் தங்கள் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஒரே நிற ஆடையில் வந்து வாக்குபதிவு செய்துள்ளது மக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது வைரலாகும் விஜயின் டிரஸ் கோட் இந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆதரவாளர்களிடையே ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது. விஜயைப் போலவே வெள்ளை சட்டை காக்கி நிற பேண்ட் அணிந்து தவெக ஆதரவாளர்கள் பலர் வாக்களித்து வருகிறார்கள். ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் இதேபோல் ஆடை அணிந்து வாக்களித்து சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரை வெள்ளை சட்டை காக்கி பேண்ட் தவெக ஆதரவாளர்களின் டிரஸ் கோடாக மாறியுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ் , நடிகர் ஜெய் , ஆதவ் அர்ஜூனா, விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் என விஜய் க்கு ஆதரவு தெரித்த பிரபலங்களும் இதே ஆடையில் வந்து வாக்களித்துள்ளார்கள். DRESS CODE !! pic.twitter.com/Bn6fJSIX8F — Vimal Kumar (@Kettavan_Freak) April 23, 2026 அதே டிரஸ் கோடில் வந்த அரசியல் தலைவர்கள் மறுப்பக்கம் தேர்தலில் வாக்களிக்க வந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் இதேபோல் வெள்ளை சட்டையும் காக்கி பேண்டும் அணிந்து வாக்களிக்க வந்துள்ளார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் , அண்ணாமை , திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் , நடிகர் விக்ரம் , அன்புமணி ராமதாஸ் . இது தற்செயலா அல்லது அனைவரும் சொல்லி வைத்து ஒரே மாதிரி டிரஸ் கோட் ஃபாலோ செய்திருக்கிறார்களா என்பது நமக்கு தெரியாது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



