IPL 2026, MI vs KKR Live Score Update: தொடரை வெற்றியுடன் தொடங்குமா மும்பை அணி? கொல்கத்தா அணியுடன் மோதல்

ஏற்றுகிறது...

IPL 2026 MI vs KKR Match Live Score: இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. இதில் முதல் போட்டியில் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது சீசனை தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, தனது முதல் போட்டியில் தோல்வியடையும் என்ற தனது நீண்ட கால ராசியை இந்த முறை முறியடிக்க மும்பை அணி வியூகம் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை. தற்போது தங்களது சொந்த மைதானத்திற்குள் விளையாடுவதால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த முறை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Pudukkottai Crime: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் செய்த போது குடிசை வீட்டில் பற்றிய தீயில் சிக்கி 70 சதவீதம் தீக்காயம் அடைந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஐபிஎல் 2026 சீசனின் 2ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11, கேப்டன்கள் பேட்டி குறித்து பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

MI vs KKR Toss Update: ஐபிஎல் 2026 சீசனின் 2வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.