நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >பூமியில் திறக்கப்பட்ட 'பாதாளத்தின் கதவு'... சைபீரியாவில் பிளந்திருக்கும் 1,640 அடி மர்மப் பள்ளம்!
💻 தொழில்நுட்பம்

பூமியில் திறக்கப்பட்ட 'பாதாளத்தின் கதவு'... சைபீரியாவில் பிளந்திருக்கும் 1,640 அடி மர்மப் பள்ளம்!

ஞாயிறு, ஏப்ரல் ௧௨, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
பூமியில் திறக்கப்பட்ட 'பாதாளத்தின் கதவு'... சைபீரியாவில் பிளந்திருக்கும் 1,640 அடி மர்மப் பள்ளம்!

சைபீரியாவின் உறைபனிப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனிபடர்ந்த நிலப்பரப்புக்கு நடுவே, பூமியின் இதயம் பிளந்தது போல பிரம்மாண்ட பள்ளம் விரிவடைந்து வருகிறது. பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் இருக்கும் இந்தப் பள்ளத்தை உள்ளூர் மக்கள் பாதாளத்தின் கதவு என்றழைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மர்மம் மட்டுமல்ல, பூமியின் கடந்த காலத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் 'காலப் பெட்டகம்' பொதுவாக விண்கல் விழுந்தாலோ, எரிமலை வெடித்தாலோ தான் இவ்வளவு பெரிய பள்ளங்கள் உருவாகும். ஆனால், இந்த 'படகைக்கா பள்ளம்' மனிதர்களின் ஒரு சிறிய தவறால் உருவானது. 1960-களில் இங்கு காடுகள் அழிக்கப்பட்டபோது, நிலத்தின் அடியில் இருந்த பனிப்பரப்பைப் பாதுகாத்து வந்த மரங்களின் நிழல் மறைந்தது. நேரடி சூரிய வெப்பத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த நிலம் உருகத் தொடங்கி, தரைப்பரப்பு அப்படியே உள்வாங்க ஆரம்பித்தது. இன்று ஒரு கிலோமீட்டர் நீளம், 100 மீட்டர் ஆழம் (1,640 அடி) என ராட்சத வடிவில் வளர்ந்து நிற்கும் இது தான் உலகின் மிகப்பெரிய 'பனி உருகு பள்ளம்'. இந்தப் பள்ளத்தின் விளிம்புகள் பெரிய காயம் போலக் கோணல் மாணலாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக வெயில் காலங்களில் பனி உருகி மண் சரிந்து விழும்போது, இங்கிருந்து பயங்கரமான வெடிப்புச் சத்தங்கள் மற்றும் முழக்கங்கள் கேட்கும். பூமிக்கு அடியில் ஏதோ நடக்கிறது என உள்ளூர் மக்கள் அஞ்சும் அளவுக்கு இதன் சத்தம் திகிலூட்டும் என்பதால் இதற்கு 'பாதாளத்தின் கதவு' என்று பெயர் வந்தது. இந்தப் பள்ளம் ஆழமாகச் செல்லச் செல்ல, விஞ்ஞானிகளுக்கு அது ஒரு புதையலாக மாறி வருகிறது. உறைந்த மண்ணுக்கு அடியில் இருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பளி யானைகள் பழங்காலக் குதிரைகள் மற்றும் காட்டெருதுகளின் உடல் பாகங்கள் அப்படியே சிதையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூமியில் 6.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை எப்படி இருந்தது என்பதற்கான தகவல்கள் இந்த மண்ணின் அடுக்குகளில் உறைந்து கிடக்கின்றன. பள்ளம் விரிவடைவது வெறும் செய்தி மட்டுமல்ல, அது அபாயச் சங்கு. பனி உருகும்போது அதற்குள் சிறைப்பட்டிருக்கும் பல கோடி டன் 'மீத்தேன்' போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இது புவி வெப்பமடைதலை இன்னும் மோசமாக்குகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

வீட்டையே தியேட்டராக மாத்துங்க.. 2026-ன் டாப் 5 சவுண்ட்பார் சிஸ்டம்கள் இதுதான்!
தொழில்நுட்பம்

வீட்டையே தியேட்டராக மாத்துங்க.. 2026-ன் டாப் 5 சவுண்ட்பார் சிஸ்டம்கள் இதுதான்!

வீட்டிலேயே சினிமா தியேட்டர் போன்ற அனுபவத்தை விரும்புவோருக்கு, சவுண்ட்பார்கள் ஒரு அருமையான தீர்வு. பெரிய, சிக்கலான ஹோம் தியேட்டர் அமைப்புகளுக்குப் பதிலாக, சவுண்ட்பார்கள் குறைந்த இடத்தைப் பிடித்துக்கொள்வதுடன், அமைப்பதற்கும் எளிதாக இருக்கின்றன. 2025-ம் ஆண்டில் சந்தையில் கிடைக்கும், சிறந்த சினிமா அனுபவத்தைத் தரும் 5 சவுண்ட்பார் தியேட்டர் சிஸ்டம்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 1. சோனி HT-S500RF: சக்திவாய்ந்த சரவுண்ட் அனுபவம் உங்க ஹோம் தியேட்டர் அனுபவத்தை அடுத்த ஸ்டெப்புக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், சோனியின் HT-S500RF சிறந்த தேர்வு. 5.1 சேனல் சவுண்ட்பார் சிஸ்டம் ஆகும். அதாவது, ஒரு சவுண்ட்பார், சப்வூஃபர் மற்றும் 2 தனித்தனி பின்புற ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதன் 1000W ஒலி வெளியீடு, திரைப்படங்களைப் பார்க்கும்போது அல்லது இசையைக் கேட்கும்போது உண்மையிலேயே ஆழ்ந்த மற்றும் தெளிவான ஒலியை வழங்குகிறது. டால்பி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வருவதால், சினிமா அரங்கில் இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம். அமைப்பதற்கு எளிதானது என்பதால், உடனடியாக சிறந்த ஆடியோ அனுபவத்தை அனுபவிக்கலாம். இதன் விலை ரூ.33,000. 2. சாம்சங் HW-Q990D: உயர்தர டால்பி அட்மாஸ் அனுபவம் சாம்சங்கின் HW-Q990D சவுண்ட்பார் சிஸ்டம், ஆடியோ உலகில் சாம்ராஜ்யம். இது முழுமையான Dolby Atmos சிஸ்டம் என்பதால், ஒலி உங்கள் சுற்றுப்புறத்தில் எல்லா திசைகளிலிருந்தும் வருவதைப் போன்ற பிரமிக்க வைக்கும் முப்பரிமாண அனுபவத்தை வழங்குகிறது. இரு HDMI 2.1 உள்ளீடுகளைக் கொண்டிருப்பதால், அதிநவீன வீடியோ சாதனங்களுடன் இணைப்பது எளிது. சினிமா பிரியர்களுக்கும், உயர்தர ஆடியோவை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் இது சிறந்த முதலீடு எனலாம். இதன் விலை ரூ.1,04,990.00 3. ஜே.பி.எல். பார் 500 Pro: சிறந்த பாஸ் உடன் விரிவான ஒலிப்பதிவு ஜே.பி.எல் பார் 500 Pro, சிறந்த பாஸ் மற்றும் தெளிவான ஒலியை விரும்புபவர்களுக்கு ஏற்றது. இது 5.1 சேனல் அமைப்புடன் டால்பி அட்மாஸ் ஆதரவையும் வழங்குகிறது. இதன் 590W வெளியீட்டு சக்தி, சக்திவாய்ந்த ஒலியை உறுதி செய்கிறது. மேலும், ஜே.பி.எல். ன் மல்டிபீம் தொழில் நுட்பம், ஒலியை அறை முழுவதும் பரப்பி, விரிவான மற்றும் தெளிவான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை உருவாக்குகிறது. திரைப்படங்கள், இசை மற்றும் வீடியோ கேம்களுக்கு ஒரு சிறந்த, அதிவேகமான ஒலி அனுபவத்தை இது வழங்குகிறது. 4. ஜெப்ரானிக்ஸ் ஜெப் ஜூக் பார் 9530 WS Pro: பட்ஜெட்டில் சினிமா தரம் ஒரு சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வேண்டும், ஆனால் பட்ஜெட் தடையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு Zebronics Zeb Juke Bar 9530 WS Pro ஒரு அருமையான தேர்வு. இது 5.1 சேனல், Dolby Audio ஆதரவுடன் வருகிறது. 400W வெளியீட்டு சக்தி, பெரும்பாலான வீடுகளுக்கு போதுமான சக்திவாய்ந்த ஒலியை வழங்குகிறது. பக்கவாட்டில் உள்ள RGB விளக்குகள் மற்றும் LED டிஸ்ப்ளே இதன் வடிவமைப்பிற்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன. மேலும், இது சுவரில் பொருத்தக்கூடிய (wall-mountable) வடிவமைப்புடன் வருகிறது, இது இடத்தை சேமிக்க உதவுகிறது. குறைந்த விலையில் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை ரூ.42,999 5. சோனோஸ் ஆர்க் அல்ட்ரா: மிகத் தெளிவான ஒலி அனுபவம் சோனோஸ் ஆர்க் அல்ட்ரா, சோனோஸ் நிறுவனத்தின் முதன்மையான சவுண்ட்பார் ஆகும். மிகத் தெளிவான ஒலி, துல்லியமான மற்றும் பரந்த முப்பரிமாண ஒலி, ஆழமான பாஸ் மற்றும் சிறந்த டால்பி அட்மாஸ் செயல்திறனை வழங்குகிறது. ஒலியின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியமாக கேட்க விரும்பும் ஆடியோஃபைல்களுக்கு இது கனவுப் பொருள். Sonos இன் பிற சாதனங்களுடன் எளிதாக இணைத்து, ஒரு பெரிய மல்டிரூம் ஆடியோ சிஸ்டத்தை உருவாக்க முடியும். இருப்பினும், சப்வூஃபர் போன்ற துணை பாகங்களை தனியாக வாங்க வேண்டும் என்பதால், இது சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். இதன் விலை ரூ.99,999 உங்க தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? சவுண்ட்பார் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் பட்ஜெட், அறையின் அளவு, நீங்கள் விரும்பும் ஒலி தரம் மற்றும் நீங்க எதிர்பார்க்கும் அம்சங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த 5 சிறந்த சவுண்ட்பார் சிஸ்டம்கள், உங்க வீட்டிற்கு சினிமா அனுபவத்தை கொண்டு வர சரியான தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

19 மணி நேரம் முன்
சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
தொழில்நுட்பம்

சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது, Accident: Lorry crashes into people standing on roadside — 5 dead. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

20 மணி நேரம் முன்
Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?
தொழில்நுட்பம்

Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?

Vivo T5 Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான 'Vivo T5 Pro' போனை, ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. Geekbench தளத்தில் சமீபத்தில் வெளியான தகவல்கள், இந்தச் சாதனம் Snapdragon 7s Gen 4 சிப்செட் மற்றும் 12GB RAM வசதியைக் கொண்டிருக்கும். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

20 மணி நேரம் முன்