நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?
💻 தொழில்நுட்பம்

Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?

ஞாயிறு, ஏப்ரல் ௧௨, ௨௦௨௬|20 மணி நேரம் முன்|vijaya lakshmi|Zee News
Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?

Vivo T5 Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான 'Vivo T5 Pro' போனை, ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. Geekbench தளத்தில் சமீபத்தில் வெளியான தகவல்கள், இந்தச் சாதனம் Snapdragon 7s Gen 4 சிப்செட் மற்றும் 12GB RAM வசதியைக் கொண்டிருக்கும்.

இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

வீட்டையே தியேட்டராக மாத்துங்க.. 2026-ன் டாப் 5 சவுண்ட்பார் சிஸ்டம்கள் இதுதான்!
தொழில்நுட்பம்

வீட்டையே தியேட்டராக மாத்துங்க.. 2026-ன் டாப் 5 சவுண்ட்பார் சிஸ்டம்கள் இதுதான்!

வீட்டிலேயே சினிமா தியேட்டர் போன்ற அனுபவத்தை விரும்புவோருக்கு, சவுண்ட்பார்கள் ஒரு அருமையான தீர்வு. பெரிய, சிக்கலான ஹோம் தியேட்டர் அமைப்புகளுக்குப் பதிலாக, சவுண்ட்பார்கள் குறைந்த இடத்தைப் பிடித்துக்கொள்வதுடன், அமைப்பதற்கும் எளிதாக இருக்கின்றன. 2025-ம் ஆண்டில் சந்தையில் கிடைக்கும், சிறந்த சினிமா அனுபவத்தைத் தரும் 5 சவுண்ட்பார் தியேட்டர் சிஸ்டம்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 1. சோனி HT-S500RF: சக்திவாய்ந்த சரவுண்ட் அனுபவம் உங்க ஹோம் தியேட்டர் அனுபவத்தை அடுத்த ஸ்டெப்புக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், சோனியின் HT-S500RF சிறந்த தேர்வு. 5.1 சேனல் சவுண்ட்பார் சிஸ்டம் ஆகும். அதாவது, ஒரு சவுண்ட்பார், சப்வூஃபர் மற்றும் 2 தனித்தனி பின்புற ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதன் 1000W ஒலி வெளியீடு, திரைப்படங்களைப் பார்க்கும்போது அல்லது இசையைக் கேட்கும்போது உண்மையிலேயே ஆழ்ந்த மற்றும் தெளிவான ஒலியை வழங்குகிறது. டால்பி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வருவதால், சினிமா அரங்கில் இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம். அமைப்பதற்கு எளிதானது என்பதால், உடனடியாக சிறந்த ஆடியோ அனுபவத்தை அனுபவிக்கலாம். இதன் விலை ரூ.33,000. 2. சாம்சங் HW-Q990D: உயர்தர டால்பி அட்மாஸ் அனுபவம் சாம்சங்கின் HW-Q990D சவுண்ட்பார் சிஸ்டம், ஆடியோ உலகில் சாம்ராஜ்யம். இது முழுமையான Dolby Atmos சிஸ்டம் என்பதால், ஒலி உங்கள் சுற்றுப்புறத்தில் எல்லா திசைகளிலிருந்தும் வருவதைப் போன்ற பிரமிக்க வைக்கும் முப்பரிமாண அனுபவத்தை வழங்குகிறது. இரு HDMI 2.1 உள்ளீடுகளைக் கொண்டிருப்பதால், அதிநவீன வீடியோ சாதனங்களுடன் இணைப்பது எளிது. சினிமா பிரியர்களுக்கும், உயர்தர ஆடியோவை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் இது சிறந்த முதலீடு எனலாம். இதன் விலை ரூ.1,04,990.00 3. ஜே.பி.எல். பார் 500 Pro: சிறந்த பாஸ் உடன் விரிவான ஒலிப்பதிவு ஜே.பி.எல் பார் 500 Pro, சிறந்த பாஸ் மற்றும் தெளிவான ஒலியை விரும்புபவர்களுக்கு ஏற்றது. இது 5.1 சேனல் அமைப்புடன் டால்பி அட்மாஸ் ஆதரவையும் வழங்குகிறது. இதன் 590W வெளியீட்டு சக்தி, சக்திவாய்ந்த ஒலியை உறுதி செய்கிறது. மேலும், ஜே.பி.எல். ன் மல்டிபீம் தொழில் நுட்பம், ஒலியை அறை முழுவதும் பரப்பி, விரிவான மற்றும் தெளிவான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை உருவாக்குகிறது. திரைப்படங்கள், இசை மற்றும் வீடியோ கேம்களுக்கு ஒரு சிறந்த, அதிவேகமான ஒலி அனுபவத்தை இது வழங்குகிறது. 4. ஜெப்ரானிக்ஸ் ஜெப் ஜூக் பார் 9530 WS Pro: பட்ஜெட்டில் சினிமா தரம் ஒரு சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வேண்டும், ஆனால் பட்ஜெட் தடையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு Zebronics Zeb Juke Bar 9530 WS Pro ஒரு அருமையான தேர்வு. இது 5.1 சேனல், Dolby Audio ஆதரவுடன் வருகிறது. 400W வெளியீட்டு சக்தி, பெரும்பாலான வீடுகளுக்கு போதுமான சக்திவாய்ந்த ஒலியை வழங்குகிறது. பக்கவாட்டில் உள்ள RGB விளக்குகள் மற்றும் LED டிஸ்ப்ளே இதன் வடிவமைப்பிற்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன. மேலும், இது சுவரில் பொருத்தக்கூடிய (wall-mountable) வடிவமைப்புடன் வருகிறது, இது இடத்தை சேமிக்க உதவுகிறது. குறைந்த விலையில் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை ரூ.42,999 5. சோனோஸ் ஆர்க் அல்ட்ரா: மிகத் தெளிவான ஒலி அனுபவம் சோனோஸ் ஆர்க் அல்ட்ரா, சோனோஸ் நிறுவனத்தின் முதன்மையான சவுண்ட்பார் ஆகும். மிகத் தெளிவான ஒலி, துல்லியமான மற்றும் பரந்த முப்பரிமாண ஒலி, ஆழமான பாஸ் மற்றும் சிறந்த டால்பி அட்மாஸ் செயல்திறனை வழங்குகிறது. ஒலியின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியமாக கேட்க விரும்பும் ஆடியோஃபைல்களுக்கு இது கனவுப் பொருள். Sonos இன் பிற சாதனங்களுடன் எளிதாக இணைத்து, ஒரு பெரிய மல்டிரூம் ஆடியோ சிஸ்டத்தை உருவாக்க முடியும். இருப்பினும், சப்வூஃபர் போன்ற துணை பாகங்களை தனியாக வாங்க வேண்டும் என்பதால், இது சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். இதன் விலை ரூ.99,999 உங்க தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? சவுண்ட்பார் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் பட்ஜெட், அறையின் அளவு, நீங்கள் விரும்பும் ஒலி தரம் மற்றும் நீங்க எதிர்பார்க்கும் அம்சங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த 5 சிறந்த சவுண்ட்பார் சிஸ்டம்கள், உங்க வீட்டிற்கு சினிமா அனுபவத்தை கொண்டு வர சரியான தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

20 மணி நேரம் முன்
சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
தொழில்நுட்பம்

சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது, Accident: Lorry crashes into people standing on roadside — 5 dead. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

20 மணி நேரம் முன்
கடலுக்கு நடுவே மின்னும் நெருப்புத் தீவு... எரிமலை இல்ல; பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
தொழில்நுட்பம்

கடலுக்கு நடுவே மின்னும் நெருப்புத் தீவு... எரிமலை இல்ல; பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

பூமியில் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான தீவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான அடையாளம் உண்டு. சில தீவுகள் பசுமையால் மரகதத் தீவு என்றும், சில பூலோக சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட தீவு மட்டும் பல நூற்றாண்டுகளாக நெருப்புத் தீவு (Island of Fire) என்றழைக்கப்படுகிறது. அது எந்தத் தீவு? அங்கு நிஜமாகவே நெருப்பு எரிகிறதா? விரிவாகப் பார்ப்போம். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய விசயாஸ் பகுதியில் அமைந்துள்ள சிறிய வெப்பமண்டலத் தீவுதான் 'சிிகுயிஜோர்' (Siquijor). 16-ம் நூற்றாண்டில் ஸ்பானியப் பயணிகள் இந்தத் தீவிற்கு வந்தபோது, இதற்கு இஸ்லா டெல் ஃபுயகோ (Isla del Fuego) அல்லது "நெருப்புத் தீவு" என்று பெயரிட்டனர். நெருப்புத் தீவு என்ற பெயரைக் கேட்டதும் இது ஏதோ எரிமலை நிறைந்த தீவு என்று நீங்க நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஸ்பானியர்கள் இந்தத் தீவை நெருங்கியபோது, அங்கிருந்த 'மொலாவ்' மரங்களில் ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பூச்சிகளின் ஒளியால், இருட்டில் அந்தத் தீவே நெருப்பு பற்றி எரிவது போலப் பிரகாசமாக மின்னியது. தொலைவில் இருந்து கடலில் வரும் கப்பல்களுக்கு இந்தத் தீவு நெருப்பு வளையம் போலக் காட்சியளித்ததால், இதற்கு இந்தப் பெயர் வந்தது. மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக மரங்களில் அமர்ந்து ஒளிர்வதே இந்தத் தீவின் அடையாளப் பெயருக்குக் காரணம். நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் பிலிப்பைன்ஸின் 3-வது சிறிய மாகாணம் இதுவாகும். ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பு, இங்குள்ள மரங்களின் பெயரால் இது 'கடுகாசன்' (Katugasan) என்று அழைக்கப்பட்டது. இந்தத் தீவு முழுவதும் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. இது ஒரு காலத்தில் இந்தத் தீவு கடலுக்கு அடியில் இருந்ததைக் காட்டுகிறது. கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் இப்போதும் ராட்சத சிப்பிகளின் புதைபடிவங்கள் கண்டறியப்படுகின்றன. இன்றும் இங்குள்ள மக்கள் பழங்கால மூலிகை மருத்துவம் மற்றும் ஆன்மீகச் சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். இங்குள்ள ஒரு ராட்சத 'பலேடே' (Balete) மரத்தின் வேர்களில் ஊற்று நீர் உற்பத்தியாகிறது. இதற்கு மருத்துவக் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. உலகிலேயே அதிக கடல்வாழ் உயிரினங்கள் வாழும் 'பவள முக்கோண' (Coral Triangle) பகுதியில் இந்தத் தீவு அமைந்துள்ளது. இங்குள்ள மாங்குரோவ் காடுகள் மற்றும் பவளப் பாறைகள் கடல் சூழலை மிக ஆரோக்கியமாக வைத்துள்ளன. மின்மினிப் பூச்சிகள் அதிகம் வாழ்வது இடத்தின் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்குச் சான்றாகும். இன்று சிிகுயிஜோர் தீவு அதன் பெயருக்காக மட்டுமல்லாமல், அழகான கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், கத்தோலிக்க மரபுகளுடன் இணைந்த பழங்கால நாட்டுப்புற நம்பிக்கைகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கிறது. நெருப்பு என்பது இங்கே அழிவைக் குறிக்கவில்லை; அது மின்மினிப் பூச்சிகள் வழங்கிய இயற்கையின் பேரொளியைக் குறிக்கிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

21 மணி நேரம் முன்