பிரித்தானியாவில் பனிப்புயல் தாக்கக்கூடும்; மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

0
127

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் பல பகுதிகள் பனிப்புயலால் தாக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் இருந்து வீசும் அதிவேகப் பனிப்புயல் காற்றானது, இந்த வார இறுதியில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 20 அங்குலங்கள் வரை பனியை விட்டுச்ச்செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வியாழக்கிழமை (23) முதல், பிரித்தானியா எலும்புகளை உறைய வைக்கும் அளவிற்கு பூஜ்ஜிய வெப்பநிலையை அடையும் என்றும், 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.

மேலும், இந்த வார இறுதியில் வடக்கு பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் அதிக உயரத்தில் பனிப்பொழிவின் “நீண்ட காலங்கள்” சாத்தியமாகுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை அன்று பகலில் சுமார் 6 டிகிரி செல்சியஸ் (42.8F) இருக்கும் என்றும், அதே இரவில் பிரித்தானியா லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உறைபனியாகும் அளவிற்கு வெப்பநிலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் தெற்கே வசிக்கும் மக்கள் ஆறு சென்டிமீட்டர் பனிப்பொழிவு வரை பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள கெய்ர்ன்கார்ம்ஸில் 20 அங்குலங்கள் வரை பனி இருக்கலாம் என்று வானிலை அவுட்லுக் கூறியுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு பிரித்தானியாவின் லேக் மாவட்டம் போன்ற பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் புயல் காற்றுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் உள்ளன. வெள்ளிக்கிழமை அன்று மணிக்கு 60 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசும், சனிக்கிழமை இது இந்தப் பகுதிகளில் மணிக்கு 80 மைல் வேகத்தை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று, இந்த அதிவேக பனிக் காற்றானது பிரித்தானியாவில் லண்டன், எசெக்ஸ் மற்றும் கென்ட் முழுவதும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வானிலை காரணமாக, போக்குவரத்தில் தாமதம், கட்டிடங்கள் சேதம், பாலம் மற்றும் சாலை மூடல் மற்றும் மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here