முல்லைத்தீவு சிறுமி கொலை; தாய், தந்தை, சகோதரி ஆகியோர் கைது!!

0
654

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொ.லை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

12 வயது சிறுமி கொ.லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தாய், சகோதரி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்குடியிருப்பு உடையார்கட்டில் 12 வயது சிறுமி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பின்னர், டிசம்பர் 18ம் திகதி சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மற்றும் பிரேதப் பரிசோதனையில் சிறுமி கொ.லை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கொ.லைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய் மற்றும் 21 வயதுடைய சகோதரி ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி வீட்டில் தங்கியிருந்த நிதர்சனா 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை க.லைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது தந்தை நடந்த சம்பவங்களை ஒப்புதல் வாக்கு மூலமாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கருவை க.லைப்பதற்கு சிறுமியை ம.யக்கமடையச் செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டமை தொடர்பில் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமியின் கருவினை க.லைக்கும் முயற்சியின்போது அவர் உ.யிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையின் மூலம் தெரியவருகிறது.

மேற்படி சந்தேக நபர்கள் கொலையை திசை திருப்புவதற்காக பொலிஸ் அதிகாரிகளை தவறாக வழிநடத்த முற்பட்ட போதிலும், சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்து சில நாட்களில் சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் மைத்துனர் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2022 ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here