வெளிநாட்டு பார்சல் வருகிறது என கூறி பெண்ணிடம் பல லட்சம் ஏமாற்றியவர் மாட்டினார்!!

0
200

திருமுறிகண்டி பகுதியில் பெண் ஒருவரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் மற்றுமொரு பெண்ணொருவரிடம் அவரது வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் பெறுமதியான பொருட்களை அனுப்பியுள்ளதாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பணத்தொகையினை வங்கியில் வைப்பிலிடுமாறு தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தினை மேற்படி சந்தேகநபரின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டதாக தெரிவித்துக் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறான ஏமாற்று சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவே மக்கள் விழிப்பாக இருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here