இன்று மாலை முதல் ஒரு மணிநேரம் மின் வெட்டு; மின்சார சபை வெளியிட்டுள்ள தகவல்!!

0
238

எரிசக்தி அமைச்சு எரிபொருள் விநியோகம் செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை (7) பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (7) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எரிபொருளுக்கான பணம் செலுத்தப்படாததன் காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை விடுவிக்கவில்லை.

எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள பார்ஜ் மவுண்டட் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மவுண்டட் மின் உற்பத்தி நிலையம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

அதே சமயம் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் 102 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. வெள்ளிக்கிழமை (7) மாலைக்குள் எரிபொருளை வழங்கினால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here