ஐரோப்பியா நாடுகளில் வசிப்போருக்கான முக்கிய தகவல்!!

0
145

அடுத்துவரும் ஆறு முதல் எட்டு வாரங்களில், ஐரோப்பாவில் அரைவாசிப்பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமைக்ரொன் பரவல் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஏழு மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில், தொற்றுப் பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசியை முழுமையான முறையில் பெற்றுக்கொள்ளல் அவசியமானது என அறிவிக்கப்படுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here