2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுசீட்டு எது? இலங்கைக்கு கிடைத்த இடம்!!

0
115

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது.

111 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, லெபனான் மற்றும் சூடான் நாடுகளுடன் 102வது இடத்தை பிடித்துள்ளது.

அதற்கமைய இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு முதல் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டு வருகின்றது.

அதற்கமைய இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கடவுசீட்டுகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. குறித்த நாடுகளின் கடவுசீட்டுகளை கொண்டு 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here