11 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம்; 6 பேர் கைது!!

0
440

11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு யுவதிகளை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் விசேட தேவையுடையவர்கள் என்பதுடன், மேற்படி சந்தேக நபர்கள் வட்ஸ்அப் மூலம் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி தற்போது முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தெஹிவளையில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு சென்ற சிறுமி மறுநாள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வீடு திரும்பிய சிறுமி சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

சிறுமி ஆபத்தான போதைப்பொருளை உட்கொண்டதை சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா உறுதிப்படுத்தியதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சிறுமி வட்ஸ்அப் மூலம் யுவதி ஒருவரை பழகி, அவர் மூலம் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த இளைஞனுடனும் பின்னர் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த “டிக்டோக் கிரி சமன்” என்ற நபருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருந்தொன்றுக்கு “டிக்டொக் கிரி சமன்” அழைப்பின் பேரில், அந்த பெண் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு தெரியாமல், டிசம்பர் மாதத்தின் நாள் ஒன்றில் மதியம் 12 மணியளவில் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதன்போது ´டிக்டொக் கிரி சமன்´ என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்த மற்றொரு நபர் சிறுமியுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 20, 21, 22 ஆம் திகதிகளில் பேலியகொட பிரதேசத்தில் விருந்து ஒன்றிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மறுநாள் காலை 6.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது ´டிக்டொக் கிரி சமன்´ மற்றும் மற்றொரு நபர் சிறுமியுடன் உடலுறவு கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மறுநாள் மதியம் வரை மகள் வீடு திரும்பவில்லை என மாற்றுத்திறனாளி பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்ததை அடுத்து இந்த குற்றச்செயல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தான் சிறிய மண் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சிறுமி தெரிவித்துள்ள நிலையில், பொலிசார் குறிப்பிட்ட இடத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 மற்றும் 22 வயதுடைய ராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here