அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாயும் மகனும்!!

0
239

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் சிட்னியின் மேற்கு Wentworthville-இல் உள்ள கால்வாயில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதில் பயணம்செய்த தாயையும் மகனையும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே கால்வாய் பகுதியில் இன்று காலை இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், அவை காணாமல்போன தாய் மற்றும் மகனுடையதாக இருக்கும் என நம்பப்படுகிறபோதும் பொலிஸார் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

நேற்று மாலை 4.30 மணியளவில் Cooper Creek கால்வாயில் Mazda3 கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டு அதனுள்ளிருந்த தனிப்பட்ட உடைமைகளை கண்டுபிடித்தபோதிலும், காரின் உரிமையாளரான 67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் அவருடன் இருந்ததாக நம்பப்படும் அவரது 34 வயது மகன் பிரமுத் ஆகியோரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை,

அதேவேளை , தாய் ,மற்றும் மகன் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட காரில் ஆவணங்கள் காணப்பட்ட போதும், இருவரும் இருக்கவில்லை. இந்த நிலையில், ஆண், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள அது காணமல்போன யாழை சேர்ந்த தாய், மகனுடையதா என்பதை உறுதி செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பின்னணிகொண்ட ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

மகன் பிரமுத் விசேட தேவையுடையவர் எனவும் மற்றவர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here