பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

0
144

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.

18.05.2022 அன்று மாலை 6.00 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமானது.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு “முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையில் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.C

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here