பிரித்தானிய மன்னராக முடிசூடினார் சார்லஸ்..!

0
218

பிரித்தானியாவின் மன்னராக மூடிசூடிக்கொண்ட 3ஆம் சார்லஸ் அரியணையில் அமரவைக்ககப்பட்டார்.

மன்னரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.

இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன் இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை மன்னருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு இருக்கும்.

முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி சென்ற மன்னருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமர வைக்கப்படுவார்.

பின்னர் மன்னரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here