பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்..கவுன்சில் வீடு இல்லை..Student Visa இல்லை…வேலை இல்லை..!

0
269

அடுத்த பொதுத் தேர்தல் வர முன்னர் முக்கியமான நடவடிக்கை ஒன்றில் இறங்குமாறு ஆழும் கட்சி பிரித்தானிய பிரதமருக்கு சில கட்டளைகளை போட்டுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அது என்னவென்றால் 12 அம்சம் கொண்ட ஒரு பெரும் அதிர்ச்சித் திட்டம், இதனை “சிவப்பு தடுப்புச் சுவர்” என்று அழைக்கிறார்கள்.

மாணவர்களாக வருபவர்கள் இனி படிப்பை முடித்தபின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கி குடியுரிமை பெறுவது முடியாத காரியமாகிறது.

மேலும் முதியோர் இல்லத்தில் வேலை செய்ய மற்றும் வேறு துறைகளில் வேலை செய்ய வெளிநாட்டு வேலை ஆட்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு வருவதை பிரித்தானிய அரசு வெகுவாக கட்டுப்படுத்த உள்ளது.

இது இவ்வாறு இருக்க பிரித்தானிய பாஸ்போட் உள்ள நபர்களுக்கே கவுன்சில் வீடுகள் என்ற நடைமுறையை அரசு கொண்டுவர உள்ளது. இதனால் அகதிகள், மற்றும் வேற்று நாட்டவர்கள் வந்து கவுன்சில் வீட்டை கோர முடியாது. இவ்வாறு பிரித்தானியா தனது கதவுகளை வெகுவாக மூட உள்ளது.

காரணம் பிரித்தானிய அரசு பல பில்லியன் பவுண்டுகளை வெளிநாட்டவர்களுக்காக செலவு செய்து வருகிறது. இந்தப் பணம் பட்ஜெட்டில் பெரும் பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. இதனால் 12 அம்சங்கள் அடங்கிய “RED-WALL” என்ற திட்டத்தை ரிஷி சுண்ணக் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

இதற்கு காரணம்..

பிரித்தானியாவில் உள்ள ஆங்கில இன மக்கள், வெளிநாட்டவர்கள் அதிகம் இங்கிலாந்தில் உள்ளதாக கருதுகிறார்கள். தாம் ஏதோ அன்னியர்கள் ஆகிவிட்டதாக உணர்கிறார்கள். பிரித்தானியாவின் முழு வழமும் வெளிநாட்டவர்களுக்கே செல்கிறது என்ற ஒரு கோட்பாடு உருவாகி வருகிறது.

இதனால் அடுத்த தேர்தலை சந்திக்கும் வேளை ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி, பெரும் பின்னடைவை சந்திக்க நேரும் என்று உளவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் பல மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவர, ரிஷி சுண்ணக் முனைகிறார்.

கவுன்சில் வீடு இல்லை என்று சொன்னால் மட்டுமே போதும். பல வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் வந்து அகதிகளாக மாறவே மாட்டார்கள். இப்படி பிரித்தானிய அரசு பல சலுகைகளை அள்ளிக் கொடுத்து, அகதிகளை வரவேற்று வந்த நிலையில்.

தற்போது தனது சட்ட திட்டங்களை இறுக்கிக் கொள்ளப் பார்கிறது. காரணம் இனி தாக்குப் பிடிக்க முடியாதப்பா என்பது தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here