தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல்.!

0
434

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட் ஆகிய ஐந்து மாதங்களில் இந்த திருட்டு நடந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாணிக்கவாசகர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்போது வேறு திருமணம் செய்துள்ளதாக 60 வயதுடைய ஆசிரியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலில் திருகோணமலை பொலிஸில் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்திருந்தார். நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவை ஆசிரியர் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கிள்ளிவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.

திருடப்பட்ட தங்க நகைககளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தயாராகி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here