அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
253

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் இருக்கிறார். இருப்பினும் பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் முடிந்தவரை விஜயகாந்தை தலைகாட்ட வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

திடீரென்று உடல்நல குறையும் காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரே நாளில் 2 அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று 2-வது முறையாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ந்தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here