கிளிநொச்சியில் வீட்டின் கூரை மேல் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா.!

0
170

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக இன்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது.

இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வீட்டில் உள்ளவர்கள் ஐயப்ப பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் ஐயப்ப பக்தர்களாக உள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பெரும் குற்றவாளிகளும் சாராய, போதைப்பொருள் வியாபாரிகளாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here