இன்று (20) சனிப்பெயர்ச்சி – யார் யாருக்கெல்லாம் நல்ல மாற்றம்.. வாங்க பார்க்கலாம்..!

0
254

இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார் சனி பகவான். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார்.

நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 2023 டிச.20 (சோபகிருது வருடம் மார்கழி 4) புதன்கிழமையன்று மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்தில் இருந்து கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார். பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த சனி பெயர்ச்சிக்குள் தற்போது மீனத்தில் சஞ்சரிக்கும் ராகு, கன்னியில் சஞ்சரிக்கும் கேது ஏப் 26, 2025 முதல் கும்பம், சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளனர்.

குரு பகவான் ஏப் 30, 2024 வரை மேஷத்திலும், மே 1, 2024 – மே 13, 2025 வரை ரிஷபத்திலும், மே 14, 2025 முதல் மிதுனத்திலும் சஞ்சரிப்பார். இந்த மாற்றங்களையும் கருத்தில் கொண்டு நட்சத்திரத்திற்கான பொதுப் பலன், பரிகாரங்களை தந்துள்ளோம்.

எந்த ராசிக்கு என்ன சனி..?

ராசி / சனியின் பெயர் / பலன்கள்

மேஷம் – லாபச்சனி – முயற்சிக்குப் பின் லாபம், நன்மை
ரிஷபம் – ஜீவனச்சனி – தொழிலில் முன்னேற்றம், பிரயாணம்
மிதுனம் – பாக்கிய சனி – தந்தையுடன் கருத்து மோதல், பணப்பிரச்னை
கடகம் – அஷ்டம சனி – அனைத்திலும் கவனம் தேவை
சிம்மம் – கண்டக சனி – வாகனப் பயணத்தில் கவனம் – வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம்
கன்னி – ரண ருண சனி – வெற்றி, உடல்நலனில் கவனம்
துலாம் – பஞ்சம சனி – குழந்தைகளுடன் வாக்குவாதம்
விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி – வீடு, மனை, வாகனத்தில் பிரச்னை
தனுசு – தைரிய வீர்ய சனி – தைரியம், மதிநுட்பம் வெளிப்படும்
மகரம் – வாக்கு சனி – அலைச்சல், பேச்சில் கவனம் தேவை
கும்பம் – ஜென்மச்சனி – அனைத்திலும் கவனம் தேவை
மீனம் – விரயச் சனி – வீண் விரயம் ஏற்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here