நெல் அறுவடை நேரத்தில் பெய்த மழை; கண்கலங்க வைத்த காட்சி..!

0
199

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இந் நிலையில் அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் கிளிநொச்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது காலபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழை காரணமாக நெல் காயவிடும் தள வசதியின்மையால் வீதியில் காயவிடப்பட்ட நெல்லானது மழையில் நனைந்துள்ளன.

பரந்தன் பூநகரி வீதியில் விவசாயிகளினால் காயவிடப்பட்ட நெல்களே இவ்வாறு மழையில் நனைந்துள்ளன.

நோய்த்தாக்கத்திற்கு மத்தியில் குறைந்த விளைச்சலோடு அறுவடை செய்த நெல்லை காயவிட்ட போதே மழையில் நனைந்துள்ளதாகவும் இந்த போகத்தில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவித்ததுடன் அரசாங்கம் தமக்கான நஷ்டஈட்டை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே விவசாயிகளே வீதிகளில் நெல்லை உலரவிடும் விடும் போது வளிமண்டலவியல் அறிவிப்புக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here