வட கொரியாவில் சினிமா பார்த்த சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை.! இதோ வீடியோ

0
108

தென் கொரியா பாப் இசை சினிமாவை கண்டு களித்த 16 வயதான இரண்டு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் சமீப காலமாக நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபராக இருக்கும் கிம் ஜோங் உத்தரவில் தான் இது தொடர்வதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வட கொரியாவில் இருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், “இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here