வவுனியாவில் கொழும்பிலிருந்து வந்த சொகுசு பேரூந்து விபத்து..!

0
232

வவுனியா ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here