யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளில் இருந்து 34 கைதிகள் விடுதலை..!

0
151

76 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 600ற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 22 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here