உலகின் முதல் சைவ KFC அயோத்தியில் – ராமர் மண்ணில் திரளும் பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்.!

0
260

உலகம் முழுவதும் கேஎஃப்சி உணவகத்திற்கு பல கிளைகள் இருக்கும் நிலையில் அனைத்து கிளைகளிலும் கேஎப்சியில் அசைவம் தான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அசைவ உணவுக்கு இந்த உணவகம் பெயர் பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் அயோத்தியில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அசைவ உணவகங்கள் நடத்த தடை என்று அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசைவம் மட்டுமல்ல, மதுபான கடைகளுக்கும் இதே தடைதான் உள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச அரசு இதில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முதலாக கேஎஃப்சி தனது சைவ உணவகத்தை அயோத்தியில் திறக்க திட்டமிட்டுள்ளது. இதனால் அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேஎப்சியில் இதுவரை விதவிதமான அசைவ உணவுகளை சாப்பிட மக்கள் அயோத்தியில் முதல் முதலாக சைவ உணவுகளை சாப்பிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம், கேஎப்சி என்றாலே மொறு மொறு கோழித்துண்டுகள்தான் நம்முடைய அனைவரின் கண்முன்பும் வந்து நிற்கும்போது, சைவ கேஎப்சியா? என்று பலரும் வியந்துபோனார்கள்.

இப்படி ஒரு அறிவிப்புக்கு காரணம், பிரிட்டன் அரசு, அந்த நாட்டு மக்கள், அதிகளவு கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் களமிறங்கியதுதான். இதன் காரணமாகவே, கலோரிகள் அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்க்கும் வகையில், கே.எப்.சி. நிறுவனம், குறைந்த கலோரிகள் கொண்ட சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதாவது, 7 ஆண்டுகளில் கலோரி அளவை 20 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிட்டிருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன.

ஆனால், இப்போது உலகின் முதல் கேஎப்சி, அயோத்தியில் திறக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும், ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், சர்வதேச அளவில் சிக்கன் உணவு வகைகளுக்கு பிரபலமான கே.எப்.சி., தன் கவனத்தை அயோத்தியில் குவித்து கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here