இலங்கை பிரதிநிதியாக சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்.!

0
554

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவி முகம்மது இஸ்மாயில ரணா சுக்ரா, பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றதன் அடிப்படையில், சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா, ஓட்டமாவடி 01 208பி/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவியும் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக சிறுவர் சபையின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபை செயலாளரும், தேசிய சிறுவர் சபையின் இணைச் செயலாளருமாவார்.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்யாலய மாணவியான முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா, பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும் சார்க் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான தெற்காசிய சிறார்கள் எதிர் நோக்கும் சமகால சவால்கள் தொடர்பாக எதிர்வரும் 27,28 – 02 – 2024 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக இலங்கையின் பிரதிநிதியாக செல்ல உள்ளார்.

இவர் ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள காகிதநகர் மில்லத் வித்தியாலய அதிபரும் எழுத்தாளருமான முகம்மது இஸ்மாயில் (வாழை மயில்) தம்பதிகளின் புதல்வியாவார். எஸ்.எம்.எம்.முர்ஷித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here