சில நாட்களில் திருமணம்.. பற்களை அழகாக்க அறுவை சிகிச்சை செய்த மணமகனுக்கு நேர்ந்த சோகம்.!

0
185

பலர் உடல் தோற்றம் மற்றும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி, ஃபேஸ்லிஃப்ட் சர்ஜரி போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உடல் எடையை குறைக்க பல அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சைகள் எப்போதும் வெற்றிகரமாக இருக்க முடியுமா என்றால் இல்லை என்பதே பதில். இதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக தனது புன்னகையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 28 வயதான லக்ஷ்மி நாராயண விஞ்சித்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் தனது புன்னகையை மேம்படுத்த சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள FMS இன்டர்நேஷனல் டென்டல் மருத்துவமனையில் ‘ஸ்மைல் டிசைனிங்’ செய்யும் போது பிப்ரவரி 16 அன்று அவர் இறந்தார்.

அறுவை சிகிச்சையின் போது மகன் மயங்கி விழுந்ததையடுத்து, ஊழியர்கள் அவரை அழைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால்தான் மரணம் நிகழ்ந்ததாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.”நாங்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை குறித்து தனது மகன் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறினார். மேலும் அவரது மகனுக்கு உடல்நலக் குறைவு இல்லை. அவரது இறப்புக்கு டாக்டர்கள் தான் காரணம் என்றார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த லட்சுமி நாராயணனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அலட்சியமாக இருந்ததாக மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுகள் மற்றும் CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் நடைபெற இருந்த மணமகன் ஸ்மைல் டிசைன் அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறைவன் கொடுத்த உருவத்தையும், இறைவன் கொடுத்த புன்னகையும் மாற்ற நினைக்காதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here