அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்.!

0
208

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்ட பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவுகள் சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7 ஆயிரம் பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்துக்கு 1 கோடியே 20 இலட்சத்து 27 ஆயிரம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 1 கோடியே 10 இலட்சத்து 9 ஆயிரத்து 700 பேர் தொடர்பில் இதுவரையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here