1 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்.!

0
336

கல்வி நோக்கங்களுக்காக நிதி சிரமங்களுடன் தரம் 1 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் – 2024/2025

கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருளாதார வசதியற்ற தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் வழங்கப்படும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று வழங்கப்படவுள்ளது.

தகைமைகள்:

1) தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையுள்ள விருப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு கூடிய மாணவன் / மாணவியாக இருத்தல்.
2) தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் தரங்களிலுள்ள, 2023 ஆண்டு நடைபெற்ற இறுதி தவணை பரீட்சைக்கேற்ப வகுப்பில் 1 – 20 வரையான நிலைகளைப் பெற்ற மாணவன் / மாணவியாக இருத்தல்.
3) அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் / மாணவியாக இருத்தல்.
4) விண்ணப்பதாரரின் குடும்ப மாத வருமானம் 100,000.00 ரூபாவிற்கு மேற்படாது இருத்தல்.

கவனிக்க: 2024 ஆம் ஆண்டு 1ஆம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ / மாணவிகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ / மாணவிகள் இங்கு விண்ணப்பிக்க முடியாது.

முக்கிய விடயங்கள்:

மாணவ, மாணவியரின் குடும்பம் பற்றிய தகவல்கள், செயற்றிறன் அடைவு, இணைப்பாடவிதான செயல்பாடுகள், தலைமைத்துவம், அறநெறி பாடசாலை கல்வி போன்ற பல்வேறு விடயங்களுக்காக புள்ளிகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தனது பாடசாலை அதிபரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பம் கீழே இணைக்கப்படுள்ளது.. டவுன்லோட் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்

Instruction – Tamil

Application – Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here