சீமான் மாமா.. உங்கள பிரிஞ்சு வாழ முடியல.. மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி.!

0
115

தேர்தல் நெருங்கும் போது எல்லாம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நெறுக்குவதில் தவறாமல் செய்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. யார் தூண்டுதலில் இதைச் செய்கிறார் என தெரியவில்லை என்று பொதுமக்களே புலம்பும் அளவுக்கு தரம் தாழ்ந்து சீமான் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கு முன்பாக கன்னட திரையுலகைச் சேர்ந்த இருவர் மீதும், நாங்க அஞ்சு வருஷம் லிவிங் டூ கெதர்ல இருந்தோம்.. ஆறு வருஷம் லிவிங் டூ கெதர்ல இருந்தோம் என்று புகார் கூறி பெங்களூருவைப் பரபரப்பாக்கினார்.

இனி சென்னைப் பக்கமே வர மாட்டேன் எனக் கூறி பெங்களூரு சென்ற நடிகை விஜயலட்சுமி, தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு சீமானை வம்பிழுக்கிறார்.

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “சீமான் மாமா.. நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்லை, உங்கள பிரிஞ்சி என்னால் வாழ முடியவில்லை. எவ்ளோ சண்டை போட்டாலும் நீங்க தான் என் கணவர், என்னைய ஏத்துக்கோங்க” என பேசியிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் மலிவான அரசியலை பொதுமக்கள் பார்க்க போகின்றனரோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here