மகா சிவராத்திரி நாளில் இந்த செடிகளை வாங்கி வீட்டுல வைத்தால் சிவனின் அருள் கிடைக்குமாம்.!

0
191

இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சிவபெருமானுக்கு உரிய சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி. இந்து மதத்தில் மிகவும் உயர்ந்த தெய்வமாக போற்றப்படும் சிவபெருமான், அழிக்கும் மற்றும் காக்கும் கடவுளாக கருதப்படுகிறார். சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானின் ஆசியை பெற முயற்சிப்பர்.

இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சிவபெருமானுக்கு உரிய சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி. இந்து மதத்தில் மிகவும் உயர்ந்த தெய்வமாக போற்றப்படும் சிவபெருமான், அழிக்கும் மற்றும் காக்கும் கடவுளாக கருதப்படுகிறார். சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானின் ஆசியை பெற முயற்சிப்பர்.

1. வில்வ மரம்
மரங்களுள் வில்வ மரம் மிகவும் மங்களகரமான மரமாகும். இந்த வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. பண்டைய வேதங்களின் படி, வில்வ இலைகளும், அதன் பழங்களும் சிவபெருமானின் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

இன்று வரை சிவபெருமானை வழிபடும் போது, சிவனை மகிழ்விக்கவும், அவரது அருளைப் பெறவும் வில்வ இலைகளை வாங்கி வழிபட்டு வருகிறோம். இப்படிப்பட்ட வில்வ மரம் உங்கள் வீட்டில் இல்லாவிட்டால், இந்த மகா சிவராத்திரி நாளில் வில்வ செடியை வாங்கி வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படுவதோடு, சிவனின் அருள் அந்த வீட்டில் உள்ளோருக்கு இருக்கும்.

2. கரு ஊமத்தை செடி
பொதுவாக வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது என்ற ஒரு கருத்து வாஸ்துவில் கூறப்பட்டிருந்தாலும், மகா சிவராத்திரி அன்று கரு ஊமத்தை செடியை வாங்கி வளர்க்கலாம். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கரு ஊமத்தை செடியை மகா சிவராத்திரி நாளில் வீட்டில் வாங்கி வந்து வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்த செடியை வீட்டில் வளர்த்தால், மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, சிவனின் அருளால் வீட்டில் ஏற்படும் பேரழிவுகள் தடுக்கப்பட்டு, சிவனின் ஆசி பரிபூர்ணமாக கிடைக்கும்.

3. மல்லிகை செடி
மகா சிவராத்திரி நாளில் வீட்டில் வாங்கி வர ஏற்ற மற்றொரு அற்புதமான செடி தான் மல்லிகை செடி. இந்த செடி பார்வதி தேவிக்கு மிகவும் பிடித்த செடியாக நம்பப்படுகிறது. எனவே சிவ பக்தர்கள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் ஆசியைப் பெற விரும்பினால், நல்ல மணம் கொண்ட மல்லிகை செடியை வீட்டில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

இதனால் சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் தம்பதிகளிடையே உள்ள பிரச்சனைகள் நீங்கும் மற்றும் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 செடிகளையும் வருகிற மகா சிவராத்திரி நாளில் வாங்கி வீட்டில் வளர்த்து வந்தால், சிவன் மற்றும் பார்வதி தேவியின் பரிபூர்ண அருள் எப்போதும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here