செம மாஸ்.. ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி.. இதோ வீடியோ.!

0
159

தமிழ் திரையுலகில் 1999ம் ஆண்டு அஜீத்துடன் வாலி திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகி விருதை தட்டிச் சென்றவர். தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி என முண்ணனி கதாநாயகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்தார்.

விஜய்யுடன் இணைந்து நடித்த “குஷி “ திரைப்படத்தின் மூலம் அகில உலக தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியானார். இதன் பிறகு ஜோதிகா பான் இந்தியா நடிகையானார். “பச்சைக்கிளி முத்துச்சரம் ” திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சந்திரமுகி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தை கொண்டாடதவர்கள் இல்லை எனலாம். எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது முழுமையான உழைப்பின் மூலம் அதனை வெற்றி பெறச் செய்வது தான் இவரது திறமை. இவர் நடிகர் சூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இனிய இல்லற வாழ்வில் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

குழந்தைகள் வளர்ந்த பின்னர் 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அத்துடன் 2டி தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஜெய்பீம் படம் பிரச்சினையை சந்தித்த நிலையில் தயாரிப்பு பணிகளில் இருந்து விலகி மீண்டும் நாச்சியார், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், ராதாமோகனின் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என பல்வேறு படங்களில் நடித்தார். தற்போது ஜோதிகா சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளார். இதில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள், ஓவியங்கள், ஜெய்பீம் திரைப்படத்திற்காக சூர்யாவும், தானும் வாங்கிய தேசிய விருதுகள் உட்பட பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது 45 வயதில் ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தமது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவில் மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். ஜிம்மில் தான் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here