இலங்கையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.!

0
232

கடந்த சில தினங்களாக குறைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (07) அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 6090 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் அதிகரித்து 48750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களுடன் ஒப்பிடம் போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஓராண்டன் ஒப்பிடும் போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 315 டொர்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக புவிசார் அரசியல் தீவிரநிலை தங்கத்தின் விலையில் இந்த வியத்தகு உயர்வுக்கு பங்களித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இந்த வகையான ஏற்ற இறக்கம் இருக்கும்போது தங்கத்தை சேமித்து வைக்க எதிர்பார்கின்றன. மேலும் ஆசிய சந்தைகளில் தங்கப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அல்லது மத்திய வங்கியின் வட்டி விகிதம் தங்கத்தின் விலையை உயர் மட்டத்தில் பராமரிக்க ஒரு முக்கிய காரணியாகும்

இந்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 2,300 டொலராக உயரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here