கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்.!

0
174

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேரின் இறுதிக்கிரியைகளை அந்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த 06 பேரின் இறுதிக்கிரியைகளையும் கனடாவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகள் காரணமாக சடலங்களை கனேடிய பொலிஸார் இன்னும் விடுவிக்கவில்லை.

கொலைச் சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விசாரணை முடிந்த பின்னர், உயிரிழந்த 6 பேரின் இறுதிக் கிரியை அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here