கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தர்.. நடந்தது என்ன ?

0
235

கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் யுவதியொருவரும் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர்.

இதன்பின் அதை பார்த்த சிலர் இருவரும் அலுவலகத்துக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனைடுத்து அங்கு வந்த பொலிஸார் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். நபர் மட்டும் வெளியில் வந்து தன்னை ஒரு அரச உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டார்.

மேலும் வேறு யாரேனும் உள்ளார்களா என கேட்டபோது தனது தோழி உள்ளார் எனவும் இந்த அலுவலகம் அவரது அலுவலகம் எனவும் மாலை நேரங்களில் அதில் ஓய்வு எடுக்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தோழி மலசலக்கூடத்தை பயன்படுத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணை செய்ததைத் தொடர்ந்து அப்பெண் 20 வயது மாணவி என தெரியவந்துள்ளது.

சனிக்கிழமையில் அலுவலகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெற்ற பின்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேசமயம் ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருவதாகவும், அவருடன் அலுவலகத்தில் தங்கியிருந்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்த மாணவி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் வகுப்புகளுக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here