வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்.!

0
302

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சிங்களம் மொழியிலும் முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங்க முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் மக்களை அடிப்படையாக கொண்டு “107″ எனும் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் இயங்குவதுடன், இச் சேவைக்காக தமிழ் மொழி பேசும் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சிங்களம் மொழியிலும் முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங்க முடியும்.

இதன் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பிரதேசங்களுக்கு தனது தேவைகளுக்கேற்ப வருகைத்தரும் மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் 107 எனும் அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு அழைப்புவிடுத்து பொலிசாரின் உதவியை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத் தொலைபேசி இலக்கத்தினூடாக குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், சட்ட விரோத போதைப் பொருள்கள், மதுபானம் விற்பனையாளர்கள், சுற்றுச் சூழல் மாசுபடுத்தல், வீதி விபத்துகள், இயற்கை மற்றும் மனித நடவடிக்கையால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்பான முறையான தகவல்களை அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியும்.

பொதுமக்களுக்கு முறையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கு இவ் மத்திய நிலையம் நிறுவப்படுவதற்கான நோக்கமாகும். இத் தொலைபேசி மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான இரகசியத்தண்மை பாதுகாக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு உடனடி சேவை வழங்குவதே எமது நோக்கமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here