ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் கடும் வெப்பம்.. இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.!

0
45

ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியில் இருந்து அதிக வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம் என சமுத்திரவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எல்-நினோ (El- Nino) தாக்கத்தினால் பருவமழையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குருநாகலில் நேற்று அதிக வெப்பநிலை பதிவானது. 36.1 பாகை செல்சியஸாக குருநாகலில் வெப்பநிலை பதிவானது. இரத்தினபுரி மாவட்டத்தில் 35.4 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவானது.

வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்தில் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here