நாளை (25) பங்குனி உத்திர நாளில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திர கிரகணம்..!

0
419

Lunar Eclipse 2024: கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்த முறை பங்குனி உத்திர தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது.

சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி நாளை காலை 10:23 மணி முதல் பிற்பகல் 3:02மணி வரை நீடிக்கும். அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

பங்குனி உத்திர நாளில் ஏற்பட உள்ள சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், தெற்கு நார்வே, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும்.

சந்திர கிரகணம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. முதலாவதாக, இது முழு சந்திர கிரகணம் அல்ல, ஆனால் இது ஒரு பெனும்பிரல் என்னும் பகுதி சந்திர கிரகணம்.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழும்,​​ பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் கடவுளை நினைத்து வழிபட வேண்டும்

2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.

4. குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

1. உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.

2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவதால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.

3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுதால் நன்மை உண்டாகும்.

4. சந்திரகிரகணம் முடிந்தவுடன் வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here