நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
158

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

மருத்துவமனையில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், அமீர் ஆகியோர் உடனடியாக குவிந்தனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகர் டேனியல் பாலாஜி (48-வயது), வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருந்தார்.

சொந்த பெயரான பாலாஜி, நடிகை ராதிகாவின் சித்தி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் அறிமுகமான பின்னர், டேனியல் பாலாஜியாக மாறிற்று. நடிகர் முரளியின் நெருங்கிய உறவினரான டேனியல் பாலாஜி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த ‘காமராசு’ படத்தில் உதவி இயக்குனராக முதன்முதலில் பணிபுரிந்து, திரையுலகில் நுழைந்தார்,

நேற்று திடீரென நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொட்டிவாக்கம் Promed மருத்துவமனையில் டேனியல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் செய்தி கேள்விப்பட்டு இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், சந்தோஷ் நாராயணன், கவுதம் மேனன் மற்றும் நண்பர்கள் நள்ளிரவில் குவிந்தனர். டேனியல் பாலாஜியின் தாயாரும், நடிகர் முரளியின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here