என் கணவனைக் போட்டுத்தள்ளுபவர்களுக்கு 50,000 ரூபா… வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.!

0
95

திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலை செய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைது செய்யப்பட்டார்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரம் இருவரில் ஒருவர் பழிவாங்கும் வேலையில் இறங்கிவிடுவது வழக்கம்.

மத்தியப் பிரதேச மாநிலம், பாஹ் மாவட்டத்தில் உள்ள பிண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை நிஷாந்த் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஐந்து மாதங்களில் அப்பெண் தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதோடு தனது கணவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்ததோடு, பராமரிப்பு செலவு கொடுக்க உத்தரவிடக் கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிஷாந்த் தனது மனைவியை பார்க்க அவரது ஊருக்கு சென்றார்.

ஆனால் அங்கு நிஷாந்த்தை அவரது மாமனார் மற்றும் மாமியார் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். நிஷாந்த் தனது சொந்த ஊருக்கு வந்த பிறகு அவரின் மனைவி, நிஷாந்தைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது மொபைல் போனில் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்தார்.

அதில், தனது கணவனைக் கொலைசெய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை நிஷாந்த் நண்பர்கள் சிலர் பார்த்துவிட்டு, உடனே நிஷாந்த்திற்கு தகவல் கொடுத்தனர்.

நிஷாந்த்தும் அந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸைப் பார்த்தார். அதன் அடிப்படையில் இது தொடர்பாக தனது மனைவிக்கு எதிராக போலீஸில் புகார் செய்துள்ளார்.

தங்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் தனது மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும், அனைத்து பிரச்னைக்கும் அதுதான் காரணம் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here