ஏப்ரல் 08 ஆம் திகதி திங்கட் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்.!

0
106

மேஷம்:
இன்று புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:
இன்று அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்:
இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சிம்மம்:
இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி:
இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

துலாம்:
இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்:
இன்று வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு:
இன்று பார்வையாலேயே மற்றவர்களை பணியவைப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6.

மகரம்:
இன்று பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6.

கும்பம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:
இன்று குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here