மின்சாரம் தாக்கியதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு.!

0
96

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்கும் போது அவருக்கு வயது 64, அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாலித தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகன் அருண் தெவரப்பெரும சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.

‘அவரின் தனியார் தோட்டத்தில் உரமிடும் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் மின்விளக்குகளுக்காக பல இடங்களில் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. தெரியாமல் தரையில் கிடந்த மின் வடத்தை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அங்கிருந்த தொழிலாளர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சுமார் 40 நிமிடங்கள் ஆனது’ என கூறினார்.

64 வயதுடைய பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றுகாலப்பகுதியில் தடைகளுக்கு மத்தியிலும் களத்தில் இறங்கி முன்கள பணியாளராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here